Logo

வலுக்கிறது மழை! நாளை முதல் பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை மையம் இந்த கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என அறிவித்துள்ளது.
 | 

வலுக்கிறது மழை! நாளை முதல் பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை!

தமிழகத்தில்  கடந்த  ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை மையம் இந்த கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர், " தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வலுபெற்றுள்ளது. தமிழகத்தில் 17 இடங்களில் கனமழை மற்றும் 3 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. தென்தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 2

4 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு. காவிரி டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேட்டுப்பாளையத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதிகளுக்கு தமிழக மீனவர்கள் செல்ல வேண்டாம்." என்றார். தொடர் கனமழையின் காரணமாக, இன்றும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி,புதுக்கோட்டை, திருவாரூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் ,கடலூர், சிதம்பரம், வடலூர் மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் கனமழை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP