Logo

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

உள்தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

உள்தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும்,  ‘வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும்’ என்றும் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூர், மாத்தூரில்  9 செ.மீ., கடலாடியில் 8 செ.மீ., சித்தம்பட்டியில் 7 செ.மீ., ஒகேனக்கல்லில் 6 செ.மீ., குழித்துறை, மேலூரில் 4 செ.மீ., ஸ்ரீவைகுண்டம், கள்ளக்குறிச்சி, சிவகிரி, சமயபுரத்தில் 3 செ.மீ., தேவாலா, தக்கலையில் 2 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP