Logo

பிரியாங்காவை கொலை செய்த இடத்திலேயே குற்றவாளிகளுக்கு என்கவுன்டர்... போலீஸ் விளக்கம்..

பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் 4 பேரையும் எதற்காக என்கவுன்டர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
 | 

ஹைதராபாத்தில் வசித்து வந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி,  கடந்த 27ஆம் தேதி கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவரின் கொலை சம்மந்தமாக போலீசார் முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு, ஷிவா  ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர். அதில் 3 பேர் 18 வயதுக்கு குறைவான மைனர்கள். முகமது பாஷா என்பவர் லாரி ஓட்டுனர். மற்ற மூவரும் க்ளீனர்கள் ஆவர்.

பிரியங்காவின் இரு சக்கரவாகனத்தை முன்பே திட்டமிட்டு பஞ்சர் செய்த இவர்கள் உதவி செய்வது போல் நடித்துள்ளனர். ஆனாலும் அவர்களை பிரியங்கா நம்பாததால் தன் செல்போன் எண்ணை அந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கொடுத்துள்ளார். இடையில் ஒரு தடவை பிரியங்கா தனது செல்போனில் இருந்து அந்த நம்பருக்கு ஒருமுறை அழைத்துள்ளார். அதை ஆதாரமாகக் கொண்டே போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

பிரியாங்காவை கொலை செய்த இடத்திலேயே குற்றவாளிகளுக்கு என்கவுன்டர்... போலீஸ் விளக்கம்..

இந்நிலையில் இன்று அதிகாலை சம்பவம் நடந்த இடமான ஹைதராபாத் - பெங்களூரு நெடுஞ்சாலையான 44 நெடுஞ்சாலைக்கு குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் அழைத்து சென்று  விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, எப்படி கொலை செய்தார்கள் என்பதை நடித்து காட்டுமாறு கூறியுள்ளனர். அவர்கள் நடித்து காட்டும் போது, திடீரென தப்பி ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

பிரியங்கா எரித்து கொல்லப்பட்ட அதே இடத்திலேயே குற்றவாளிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைத்து விட்டதாக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP