மதுரை - சென்னை தேஜஸ் ரயில் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

மதுரை - சென்னை இடையே, அதிவிரைவு, தேஜஸ் ரயில் சேவை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆறு மணி நேரத்தில், மதுரையிலிருந்து சென்னைக்கு சென்றடையலாம்.
 | 

மதுரை - சென்னை தேஜஸ் ரயில் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

கன்னியாகுமரியில், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து, மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய, பிரதமர் நரேந்தரி மாேடி, பொதுமக்கள் முன்னிலையில் பேசியதாவது: 

தமிழகத்தில் வசிக்கும் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சீர் மிகு திட்டங்களாக, தமிழகம் பீடு நடை போடுகிறது. அவருக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன்.

அவர் விட்டுச் சென்ற நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு பல பெருமைகள் உண்டு. அந்த வகையில், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தை சேர்ந்தவர்;  விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது மிகவும் பெருமையானது.  காந்தி அமைதி விருது பெற்ற விவேகானந்தா கேந்திராவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

மதுரை - சென்னை இடையே, அதிவிரைவு, தேஜஸ் ரயில் சேவை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆறு மணி நேரத்தில், மதுரையிலிருந்து சென்னைக்கு சென்றடையலாம். 

இந்த ரயில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சென்னையில் உருவாக்கப்பட்டது. இது, இந்தியாவிலேயே மிக நவீனமான ரயில் என்பதில் பெருமை கொள்கிறேன். பல சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் சேவை துவங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 1964ல் வீசிய புயலுக்குப் பின், தற்போது தான் இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. பாம்பனில் புதிய பாலம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

உலக அளவில், வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மிகப் பெரிய அளவிலான ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தை நம் அரசு செயல்படுத்தி உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP