Logo

அமைச்சர் காருக்கு டீசல் நிரப்ப மறுத்த பெட்ரோல் பங்க்.. காரணம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..

அரசு பெட்ரோல் பங்கில், அமைச்சர் காருக்கு டீசல் நிரப்ப மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

அமைச்சர் காருக்கு டீசல் நிரப்ப மறுத்த பெட்ரோல் பங்க்.. காரணம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..

அரசு பெட்ரோல் பங்கில், அமைச்சர் காருக்கு டீசல் நிரப்ப மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில், அரசு கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க், ஒன்று இ.சி.ஆரில் உள்ளது. இங்கு, முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு துறைகளின் வாகனங்களுக்கு, பெட்ரோல், டீசல், கடனாக நிரப்பப்படும். அதற்கான தொகையை, சம்பந்தப்பட்ட அரசு துறைகள், வழங்குவது வழக்கம். இந்த வகையில், இ.சி.ஆர்., பெட்ரோல் பங்க்கில் மட்டும், புதுச்சேரி அரசு துறைகள், 2.30 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.

இதனால், பெட்ரோல் பங்க்கை தொடர்ந்து நடத்துவதில், பொதுத்துறை நிறுவனமான அமுதசுரபி நிறுவனத்துக்கு பெரும் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த, டிச. 31ம் தேதிக்கு பின், அரசு வாகனங்களுக்கு, கடனில், பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டாம் என ஊழியர்களுக்கு அமுதசுரபி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு, 8:10 மணியளவில், புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனின் அரசு காரை இசிஆர் பங்க்குக்கு டிரைவர் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, அமைச்சர் காருக்கு டீசல் நிரப்ப, ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதனால், அமைச்சரின் கார் டிரைவருக்கும், பங்க் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குள், பொதுமக்களின் கார், பைக்குகள் வரிசையாக நின்றதால், அமைச்சரின் கார், டீசல் நிரப்பப்படாமலேயே, இரவு 8.40 மணியளவில், பங்க்கில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP