மதுரை தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி! - சென்னை உயர் நீதிமன்றம்

சித்திரை திருவிழா நடைபெறுவதையொட்டி, மதுரையில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
 | 

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக ஆகிய இருபெரும் கட்சிகள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால், தேர்தல் ஆணையத்தில் போலி கணக்குகளை காட்டுவதாகவும், இதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் சார்பில் கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த மனுவின் மீதான விசாரணையில் தேர்தல் ஆணையம் தரப்பில், "மதுரையில் பணப்பட்டுவாடா தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சுப்பிரமணியம், மணிக்குமார் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP