வெற்றி சான்றிதழை தட்டி பறிக்கும் எதிர் வேட்பாளர்.. வைரலாகும் வீடியோ..

காரைக்குடி சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவி மாங்குடியின் வெற்றிச் சான்றிதழை தட்டிப்பறிக்கும் எதிர் வேட்பாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.
 | 

வெற்றி சான்றிதழை தட்டி பறிக்கும் எதிர் வேட்பாளர்.. வைரலாகும் வீடியோ..

காரைக்குடி சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவி மாங்குடியின் வெற்றிச் சான்றிதழை தட்டிப்பறிக்கும் எதிர் வேட்பாளரின் வீடியோ வைரலாகி வருகிறது. 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, 2 முறை தலைவராக இருந்த மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தொழில் அதிபர் அய்யப்பன் மனைவி பிரியதர்சினி களம் இறங்கினார். இவர்கள் 2 பேருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதற்கொண்டு முன்னணி நிலவரம் அடிக்கடி மாறி கொண்டே இருந்தது. 

இந்நிலையில் இரவு 10 மணிக்கு தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வெற்றிச்சான்றிதழும் வழங்கப்பட்டது. அப்போது, தேவி மாங்குடியின் வெற்றிச் சான்றிதழை பிரியதர்ஷினி தட்டிபறிக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. பின்னர் காரைக்குடி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிரியதர்சினி தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதிகாலை 2 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், தேவி தரப்பினர் அங்கிருந்து சென்று விட்டனர். எதிர் தரப்பினர் அங்கேயே அமர்ந்ததால், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்து தேவி தரப்பினருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனால், எதிர்தரப்பினர் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரவில்லை. இதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் பார்வையாளர் கருணாகரன், தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயகாந்தன் அங்கு வந்தனர். காலை 5 மணிக்கு 63 வாக்குகள் வித்தியாசத்தில் பிரிய தர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2 பெண்களுக்கு மாறி, மாறி வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP