புத்தாண்டுக்கு குறி.. ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய போதை பொருள் சிக்கியத

புத்தாண்டுக்கு குறி.. ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய போதை பொருள் சிக்கியது..
 | 

புத்தாண்டுக்கு குறி.. ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய போதை பொருள் சிக்கியது..

சென்னை மேடவாக்கம் புதுநகர் பேருந்து நிலையம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த சிலர் ஹெராயின் விற்பனை செய்வதாக காவல்அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் காவல்துறையினர் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் 40 கிராம் ஹெராயின் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்தனர். அவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த சபீர் அகமது (28), ஜம்ருல் (19), தூரூல் இஸ்லாம் (25) என  தெரியவந்தது. இவர்களிடமிருந்து 4 செல்போன், ரூ.13,800 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் ஹெராயின் மதிப்பு ரூ. ஒரு கோடி என கூறப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தன்று சென்னை கிழக்கு கடற்கரை, ஓஎம்ஆர் மற்றும் ஐடி, கல்லூரி பகுதிகளில் போதைப்பொருள் ஹெராயின் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், போலீசார் கைதான மூவரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP