முஸ்லீம் பெண்களின் செய்த படுபாதக காரியம்! அநியாயமாய் உயிரை விட்ட நிஷா!

அதிராம் பட்டினத்தில் மருமகளை குடும்பத்தினரே கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

முஸ்லீம் பெண்களின் செய்த படுபாதக காரியம்! அநியாயமாய் உயிரை விட்ட நிஷா!

அதிராம் பட்டினத்தில் மருமகளை குடும்பத்தினரே கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள முகலாய தெருவை சேர்ந்தவர் ஷேக். இவரது மனைவி நிஷா குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் நிஷா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு செல்ல மாட்டார். வேறு ஏதோ நடந்துள்ளது என கூறி விசாரித்துள்ளனர். 

அப்போது, அவர்கள் .குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில், நிஷாவை முத்தலாக் செய்து விட வற்புறுத்தினோம். ஆனால் முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால் நிஷாவை தனது மகனை விட்டு செல்லும்படி கொடுமைபடுத்தினோம். ஆனால், நிஷா மறுத்து விட்டார். இதனால், நாங்கள் மூன்று பேரும் (மாமியார், நாத்தனார், உறவினர்) உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விட்டு, கட்டையால் அடித்து பின்னர் அவரே தூக்கு போட்டுக் கொண்டதைப் போன்று நாடகம் ஆடினோம் என தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து கொலையாளிகளை உறவினர்களே அடித்து காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்ததையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெண்கள் மூவரும் சக மருமகளை திட்டம் தீட்டி சொந்த வீட்டிலேயே அடித்து தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் கொலை நடந்த பகுதியில் தடயம் கிடைக்க கூடாது என்பதற்காக கமல் நடிப்பில் வெளியான  பாபநாசம் படத்தை செல்போனில் டவுன்லோட் செய்து தடயத்தை அழிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP