நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

நெல்லை முன்னாள் மேயர் உள்பட மூவரின் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
 | 

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

நெல்லை முன்னாள் மேயர் உள்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் வசித்து வந்த அம்மாவட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். கடந்த ஜூலை 23ம் தேதி நடந்த இந்த கொலை குறித்து ஒரு வாரமாக எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இது தொடர்பாக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் மூலமாக கொலையாளி பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இந்த கொலை வழக்கு தொடர்பாக திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் தான் இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

நெல்லை: முன்னாள் மேயர் கொலைக்கு இதுதான் காரணமா?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP