நள்ளிரவு புதுவருஷ பார்ட்டி! சென்னையில் 15,000 போலீசார் கண்காணிப்பார்கள்!

நள்ளிரவு பார்ட்டி! சென்னையில் 15,000 போலீசார் கண்காணிப்பார்கள்!
 | 

நள்ளிரவு புதுவருஷ பார்ட்டி! சென்னையில் 15,000 போலீசார் கண்காணிப்பார்கள்!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்கும் வகையில், 15,000 காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை அறிவித்துள்ளது. 

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை கூடுதல் ஆணையர்கள் அருண்குமார் மற்றும் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினர். அதில், சென்னை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட 368 இடங்களில், 31ஆம் தேதி வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு புதுவருஷ பார்ட்டி! சென்னையில் 15,000 போலீசார் கண்காணிப்பார்கள்!

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கிண்டி, அடையாறு, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
நள்ளிரவு புதுவருஷ பார்ட்டி! சென்னையில் 15,000 போலீசார் கண்காணிப்பார்கள்!

மதுப்போதையில் இருசக்கர வாகத்தை இயக்குவது, இருசக்கர வாகங்களில் சாகசம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர். அவர்களது இருசக்கர வாகனம்  பறிமுதல் செய்யப்படும் எனவும் காவவ்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறினர். 
மேலும் அனைத்து சாலைகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP