கோலம் போடுவதும் தேசவிரோதம்: கனிமொழி

நம் நாட்டில் கோலம் போடுவதும் தேசவிரோதம் என அறிந்துகொண்டதாக திமுக மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

கோலம் போடுவதும் தேசவிரோதம்: கனிமொழி

நம் நாட்டில் கோலம் போடுவதும் தேசவிரோதம் என அறிந்துகொண்டதாக திமுக மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தீவிரமடைவதை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு மாணவ அமைப்புகள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோலம் போடுவதும் தேசவிரோதம்: கனிமொழி

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள தெருக்களில் மற்றும் சாலைகளில் பெண்கள் No to NRC, No to CAA என்ற வாசகங்களுடன் கோலமிட்டனர். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த ஒரு ஆண்டு மற்றும் 6 பெண்களை போலீசார் கைது செய்து அழைத்துசென்று, பின்னர் விடுவித்தனர். 

கோலம் போடுவதும் தேசவிரோதம்: கனிமொழிஇது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது போன்றவை தேசவிரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, அடிப்படை உரிமைகளை அனைவர்க்கும் உறுதி செய்து, தங்கள் எஜமானரின் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP