'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா!

சென்னை லயோலா கல்லூரியில் வீதி விருது விழா கண்காட்சியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஓவியம் சற்றுமுன் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் லயோலா நிர்வாகமும் மன்னிப்பு கோரியுள்ளது.
 | 

'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா!

சென்னை லயோலா கல்லூரியில் வீதி விருது விழா கண்காட்சியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஓவியங்கள் சற்றுமுன் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் லயோலா நிர்வாகமும் மன்னிப்பு கோரியுள்ளது. 

சென்னை லயோலா கல்லூரியில், நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 'வீதி விருது விழா' கடந்த இரு தினங்கள் நடைபெற்றது. இதில், பல்வேறு ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், மத்திய பாஜக அரசை தரக்குறைவாக விமர்சித்தும் சில ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.  

'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா!

இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய செயலர் எச்.ராஜா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இன்று காலை சென்னை காவல் ஆணையரிடம் இதுகுறித்து புகாரும் அளிக்கப்பட்டது. 

அந்த புகாரின் படி, காவல்துறை உடனடியாக அந்த ஓவியங்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் லயோலா நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. 

லயோலா நிர்வாகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், "சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலான எந்த செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை சர்ச்சைக்குரிய ஓவியங்கள் பற்றி அறிந்ததும் கண்காட்சியிலிருந்து அவற்றை நீக்கி விட்டோம். வீதி விருது விழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தி ஓவியங்கள் இடம் பெற்றமைக்கு கல்லூரி நிர்வாகம் வருத்தம் தெரிவிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது. 

'இதுக்கு நாங்க பொறுப்பில்ல' - சர்ச்சை ஓவியம் விவகாரத்தில் மறுக்கும் லயோலா!

ஆனால் மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டுள்ள லயோலா கல்லூரியின் பேராசிரியரும், இந்த  நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர். காளீஸ்வரன் தான் இந்த கண்காட்சிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். அவரே ஒப்புதல் அளித்துவிட்டு அவரே தற்போது மறுப்பது எந்த விதத்தில் நியாயம்? என இந்து அமைப்புகள் கொந்தளிப்பில் உள்ளன.

அதேபோன்று, சர்ச்சைக்குரிய ஓவியங்கள் வைக்கப்பட்டது குறித்து தங்கள் கவனத்திற்கு வந்த உடனே நாங்கள் நீக்கிவிட்டோம் என்று கல்லூரி தரப்பு கூறுவதும் பொய். இன்று காலையில் தான் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்து சர்ச்சைக்குரிய ஓவியங்களை அப்புறப்படுத்தியுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP