கலைஞர் வீட்டு வாசலில் தாமரைப்பூ கோலம்! மூல பத்திரம் எங்கே? ட்ரெண்டாகும் சோகம்!

கலைஞர் வீட்டு வாசலில் தாமரைப்பூ கோலம்! மூல பத்திரம் எங்கே? ட்ரெண்டாகும் சோகம்!
 | 

கலைஞர் வீட்டு வாசலில் தாமரைப்பூ கோலம்! மூல பத்திரம் எங்கே? ட்ரெண்டாகும் சோகம்!

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இம்மசோதாவைத் திரும்பப் பெற நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த வாரம் எதிர்கட்சிகள் இணைந்து பேரணியை நடத்தி எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான திமுகவின் போராட்டம் தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கலைஞர் வீட்டு வாசலில் தாமரைப்பூ கோலம்! மூல பத்திரம் எங்கே? ட்ரெண்டாகும் சோகம்!

இந்தச் சூழ்நிலையில், திமுக எம்.பி. கனிமொழியின் தூத்துக்குடி இல்லத்தின் வாசலில் என்.ஆர்.சி, என்.பி.ஆர்-க்கு எதிராக கோலம் வரையப்பட்டுள்ளது. ஏற்கனவே  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை பெசண்ட் நகரில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கோலம் வரைந்தவர்களை வீட்டுக்காவலில் வைத்து பின் விடுதலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தியவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர்  மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார். கனிமொழி தற்போது தூத்துக்குடி இல்லத்தில் இல்லை என்றாலும் இன்று (திங்கள்கிழமை) காலை தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி வீட்டு வாசலில் வண்ணக் கோலம் வரையப்பட்டு 'வேண்டாம் CAA, NRC' என்று எழுதப்பட்டுள்ளது. . அவர் உத்தரவின் பேரிலேயே கோலம் வரையப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் வீட்டு வாசலில் தாமரைப்பூ கோலம்! மூல பத்திரம் எங்கே? ட்ரெண்டாகும் சோகம்!

மதுரையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் தமிழரசியின் வீட்டு வாசலிலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்கள் வரையப்பட்டுள்ளன. இந்நிலையில், கனிமொழி வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த கோலத்தில் தாமரைப் பூ மலர்ந்துள்ளதாக பாஜக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

தவிர, பாஜக தொண்டர்களும், தங்களது வீடுகளின் முன்பு, தாமரைப் பூ கோலங்களைப் போட்டு, மூல பத்திரம் எங்கே? என்று எழுதி வருகிறார்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP