Logo

சொகுசு வாழ்க்கை வாழனும்... அதுக்கு தோழியுடன் சேர்ந்து திருடனும்... அப்புறம் கம்பி எண்ணனும்..

சொகுசு வாழ்க்கை வாழனும்... அதுக்கு தோழியுடன் சேர்ந்து திருடனும்... அப்புறம் கம்பி எண்ணனும்..
 | 

சொகுசு வாழ்க்கை வாழனும்... அதுக்கு தோழியுடன் சேர்ந்து திருடனும்... அப்புறம் கம்பி எண்ணனும்..

சொகுசு வாழ்க்கைக்காக நள்ளிரவில் தோழியுடன் சேர்ந்து தொடர்ந்து ஸ்கூட்டர்களை திருடி வந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சாலை மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் தொடர்ந்து மாயமாகி வந்தது. இவை தொடர்பாக காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்தன. இதற்கிடையே திருவல்லிக்கேணி தாயா சகிப் தெருவை சேர்ந்த யாசர் அராபத்(26) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் காணாமல் போனது. இது தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தப்போது இரண்டு இளம் பெண்கள் சர்வசாதரணமாக வந்து போலி சாவி மூலம் ஸ்கூட்டரை திருட முயற்சி செய்துள்ளனர். அப்போது தற்செயலாக யாசர் அராபத் வீட்டின் முன்பு  பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தார்.

சொகுசு வாழ்க்கை வாழனும்... அதுக்கு தோழியுடன் சேர்ந்து திருடனும்... அப்புறம் கம்பி எண்ணனும்..

இரண்டு இளம் பெண்கள் ஸ்கூட்டரை திருடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் இரண்டு பெண்களையும் சுற்றி வளைத்து தாக்கினர். இதில் ஒரு பெண் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.  அவரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவுகளுடன் யாசர் அராபத் ஒப்படைத்தார். போலீசார் இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர் திருவல்லிக்கேணி பாக்கர் சாகிப் தெருவை சேர்ந்த சந்தியா(19) என தெரியவந்தது. இவர் தனது தோழி மோனிஷாவுடன்(20) சேர்ந்து நள்ளிரவில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்படும் ஸ்கூட்டர்களை திருடி வந்ததும் தெரியவந்தது. திருடிய ஸ்கூட்டரை ஆண் நண்பர்கள் உதவியுடன் விற்பனை செய்து அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் தனது தோழியுடன் வேறு எங்கெல்லாம் தனது கைவரிசையை காட்டியுள்ளார் எனற கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP