விவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம் அறிமுகம்!

நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் மற்றும், காவல்துறையினருக்கான சிறப்பு ரோந்து வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
 | 

விவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம் அறிமுகம்!

நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் மற்றும், காவல்துறையினருக்கான சிறப்பு ரோந்து வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளுக்கான திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், போக்குவரத்து துறை சார்பில் ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்டுள்ள  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கான ரோந்து வாகனங்கள் தொடக்கி வைக்கப்பட்டது. 

விவசாயிகளுக்கான நடமாடும் பழ கூழாக்கும் இயந்திரம் அறிமுகம்!

இதை தொடர்ந்து, போக்குவரத்து விதி மீறல்கள் போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் போக்குவரத்து காவலர்களுக்கு 201 உடல் இணை கேமராக்கள் வழங்கப்பட்டது. மேலும், வேளாண் துறை சார்பில் வாங்கப்பட்டுள்ள நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரத்தையும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

இந்த தக்காளி கூழாக்கும் இயந்திரம், இந்திய உணவு பதப்படுத்தும் துறையின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயப் பொருட்களின் விற்பனை மந்தமாகும் நிலையில், விவசாயப்பொருட்கள் வீணாகமல் இருக்கவும், விவசாயிகள் நஷ்டமடையாமல் இருக்கவும் இந்த இயந்திரம் உபயோகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் தக்காளி, நெல்லிக்காய், பப்பாளி, மாம்பழம் உள்ளிட்டவைகளை மதிப்பு கூட்டப்பட்ட ஜாம், பழக்கூழ் போன்றவைகளாக மாற்றிக்கொள்ளலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP