முதல் முறையாக சாதித்த இந்திய ரயில்வே! பிளாஷ் பேக் 2019! 

முதல் முறையாக சாதித்த இந்திய ரயில்வே! பிளாஷ் பேக் 2019!
 | 

முதல் முறையாக சாதித்த இந்திய ரயில்வே! பிளாஷ் பேக் 2019! 

உலகின் மிகப் பெரிய துறையாக இந்திய ரயில்வே விளங்குகிறது. இத்தனை வருடங்களாக  விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படுவது சாதாரணமாக இருந்து வந்தது. ஆனால், இந்திய ரயில்வே வரலாற்றிலேயே முதல் முறையாக 'உயிர் பலி' இல்லாத ஆண்டாக இந்த 2019ல் சாதித்திருக்கிறது இந்திய ரயில்வே. உலகளவில் இது, மிகப் பெரிய சாதனையாகும். ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதுவது, தடம் புரள்வதும், லெவல் கிராசிங் விபத்துக்களுமாக இந்த வருடம் முழுவதும் ஏற்பட்ட இறப்புக்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், தற்கொலை செய்துக் கொள்ளும் நோக்கில் ரயிலின் முன் விழுந்து இறப்பவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 

முதல் முறையாக சாதித்த இந்திய ரயில்வே! பிளாஷ் பேக் 2019! 

2013-2015 காலகட்டத்தில் சராசரியாக ஆண்டு தோறும் 110 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 990 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துகளின் எண்ணிக்கை 195 ஆக 2017ல் குறையத் துவங்கி, கடந்த 2018ல் 28 ஆக இருந்தது. 2019ல் இதுவரை உயிரிழப்பு எங்கும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2019 ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான ஆண்டு  என்கிற புதிய உலக சாதனையைப் படைத்து இந்திய இரயில்வே நிர்வாகம் பெருமிதம் பொங்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP