அதிகரித்து வரும் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்ட்! முதலீட்டாளர்கள் உற்சாகம்!

மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு, கடந்த ஆண்டில், 3.15 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.கடந்த, 2019ம் ஆண்டில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பானது, 3.15 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 26.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 13 சதவீத வளர்ச்சிஇது, இதற்கு முந்தையஆண்டான, 2018ல், டிசம்பர் மாத முடிவில், 23.62 லட்சம்கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 | 

அதிகரித்து வரும் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்ட்! முதலீட்டாளர்கள் உற்சாகம்!

மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு, கடந்த ஆண்டில், 3.15 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது. கடந்த, 2019ம் ஆண்டில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பானது, 3.15 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 26.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 13 சதவீத வளர்ச்சி இது.

முதலீட்டாளர்கள் நம்பிக்கையை அதிகரிக்க, கடன் திட்டங்களில் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி எடுத்த நடவடிக்கைகள் இந்த வளர்ச்சி உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. மியூச்சுவல் பண்டு துறையில் ஈடுபட்டு வரும் 44 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டில், 7.5 சதவீதம் அதிகரித்திருந்தது. அதே சமயம் 2019ல் 13 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தற்போதைய, 13 சதவீதம் வளர்ச்சி குறித்து நிபுணர்கள் குறிப்பிடும் போது, இந்த இரட்டை இலக்க வளர்ச்சி சாதகமான நிலையை உணர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிக முதலீடுகள்முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், செபி எடுத்த நடவடிக்கைகள், மியூச்சுவல் பண்டு முகவர்களுக்கு, மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உதவிகரமாக அமைந்துள்ளது. இது குறித்து, குவான்டம் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம்மி படேல் கூறும் போது,  மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், தற்போது நாம் காணும் இந்த வளர்ச்சியானது, கடன் சார்ந்த திட்டங்களில் அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதால் ஏற்பட்டதாகும். கடந்த, 2019ம் ஆண்டு முதலீட்டுக்கு ஏற்ற ஆண்டாக இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டு வந்த நிலையில், அதை அடியோடு மாற்றும் வகையில், முதலீடுகள் அதிகரித்துள்ளன என்று தெரிவித்தார்.

மாதா மாதம் முதலீடும் செய்யும் வகையிலான, எஸ்.ஐ.பி., திட்டத்தின் மூலம், 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் வந்துள்ளன. இதிலிருந்து முதலீட்டாளர்கள், பங்கு சார்ந்த முதலீடுகளில் நம்பிக்கை இழக்கவில்லை என்பதும், எஸ்.ஐ.பி., முறையில் விருப்பம் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த, 2009 நவம்பரில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகித்த சொத்து மதிப்பு 8.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2019 நவம்பரில், 27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. அதாவது, பத்து ஆண்டுகளில், மூன்று மடங்குக்கும் அதிகமாக வளர்ச்சி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP