சமையல் சிலிண்டர் விலை திடீர் உயர்வு!

சமையல் சிலிண்டர் விலை திடீர் உயர்வு!
 | 

சமையல் சிலிண்டர் விலை திடீர் உயர்வு!

ரயில் கட்டண உயர்வு போல புத்தாண்டு தினத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14புள்ளி 2 கிலோ எடை உள்ள சிலிண்டரின் விலை வழக்கமானதை விட 19 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 734 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போன்று ஜெட் எரிபொருள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் இது 3 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் 2 புள்ளி 65 சதவிகிதம் அதிகரித்து கிலோ, லிட்டருக்கு 66 ஆயிரத்து 226 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணைய் விலை உயர்வே இதற்கு காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP