தமிழகத்தில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு?

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
 | 

தமிழகத்தில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு?

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முடிவடைந்த நிலையில், மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் வருகிற மே19ம் தேதி நடக்க இருக்கிறது.

இதில், மக்களவை தேர்தலின் போது, பல்வேறு வாக்குச்சாவடிகளில் மோதல்கள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்தது. அந்த வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தன.

தமிழகத்தில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு?

அதன்படி, குளறுபடி மற்றும் வன்முறை நடந்த தருமபுரி(8), திருவள்ளூர்(1), கடலூர்(1) தொகுதிக்குட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில்  மறுவாக்குப்பதிவு நடத்துமாறு கடந்த ஏப்ரல் 20ம் தேதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தார்.

அதைத்தொடர்ந்து, இ.வி.எம் மெஷின்கள் மற்றும் வி.வி.பேட் இயந்திரங்களில் குளறுபடி தொடர்பாக 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த 13 வாக்குச்சாவடிகளில் விபரமும் இன்று வெளியாகியுள்ளது.

தருமபுரி தொகுதி (8) பாப்பிரெட்டிப்பட்டி - அய்யம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண்கள் 181, 182,  நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 192, 193, 194, 195, ஜல்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 196, 197.

திருவள்ளூர் தொகுதி(1) பூந்தமல்லி மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றைய தொடக்க பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 195

கடலூர் தொகுதி(1) பண்ருட்டி அருகே  திருவதிகை நகராட்சி பள்ளியில் உள்ள 210வது வாக்குச்சாவடி. 

மேற்குறிப்பிட்ட 10 வாக்குச்சாவடிகளும் முதலில் பரிந்துரைக்கப்பட்டவை. 

தொடர்ந்து, ஈரோடு தொகுதி(1) திருமங்கலம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் உள்ள 248வது வாக்குச்சாவடி 

தேனி தொகுதி(2) ஆண்டிபட்டி வாக்குச்சாவடி எண் 67 - கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி, பெரியகுளம் வாக்குச்சாவடி எண் 197 - வடுக்கப்பட்டி சங்கரநாராயண இடைநிலைப்பள்ளி ஆகிய 3 வாக்குச்சாவடிகள் இரண்டாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டவை. மீதியுள்ள 43 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்த 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு மே 19 அன்று நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் அடங்கிய சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 18 அன்று இடைத்தேர்தல் நடந்திருந்தால், அதற்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

 

தமிழகத்தில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு?தமிழகத்தில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு?

இந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் மறுவாக்குப்பதிவுகளுக்கான முடிவுகளும் மே 23 அன்றே அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP