கணவனின் கள்ளக்காதல்! வரதட்சணைப் புகார் கொடுத்து சிக்க வைத்த மனைவி!

வேறு பெண்ணுடன் தொடர்பு.. மனைவி புகாரால் சிறையில் கம்பி எண்ணும் கணவன்..
 | 

கணவனின் கள்ளக்காதல்! வரதட்சணைப் புகார் கொடுத்து சிக்க வைத்த மனைவி!

சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் ராஜ்பாபு (28) , ஹேமலதா (26) தம்பதி. கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் முடிந்த இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

குழந்தை பிறந்ததில் இருந்தே  ராஜ்பாபு கூடுதலாக வரதட்சணை கேட்டு தராததால் ஹேமலதாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சண்டை போட்டு அடிக்கடி மனைவியை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.  இந்நிலையில், ராஜ்பாபுவுக்கு வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பு இருந்தது ஹேமலதாவுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து ஹேமலதா அடையாறில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து ராஜ்பாபுவை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP