மனைவி திட்டியதால் மர்ம உறுப்பை வெட்டிய கணவன்! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாபு (40). இவருக்கும் தேவிக்கும் (35) திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை.
 | 

மனைவி திட்டியதால் மர்ம உறுப்பை வெட்டிய கணவன்! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாபு (40). இவருக்கும் தேவிக்கும் (35) திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் இது வரை குழந்தை இல்லை. இதனால் தேவி அவ்வபோது கணவனை குத்திகாட்டி உன்னால் தான் குழந்தை இல்லை என திட்டி வந்ததாகவும், அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், புத்தாண்டு அன்று காலை தேவி கணவன் வீட்டிற்கு வந்துள்ளார். வந்த சிறிது நேரத்திலேயே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சண்டை போட்டு கொண்டு தேவி அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து குடிபோதையில் இருந்த பாபு ஒரு கத்தியை எடுத்து தனது பிறப்புறுப்பை வெட்டிக் கொண்டார். 

வலி தாங்க முடியாமல் கதறியதால், சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP