அத்தி வரதர் விழாவில் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

அத்திவரதர் விழாவிற்காக கோவிலின் உள்ளே 18 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த 18 உண்டியல்களில் 13 உண்டியல்களில் எண்ணப்பட்ட காணிக்கைகளின் மதிப்பு ரூ.9.90 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 உண்டியல்கள் எண்ணப்படவுள்ளன. இது தவிர 164 கிராம் தங்கம், சுமார் 5000 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன.
 | 

அத்தி வரதர் விழாவில் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்தி வரதர் வைபவ விழா கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியுடன் நிறைவடைந்தது. இது 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வாகும். 40 ஆண்டுகளாக திருக்குளத்தில் இருக்கும் அத்தி வரதரை வெளியே எடுத்து தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதுடன் இந்நாட்களில் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கிய இந்த வைபவம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்தி வரதர் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்றக் கோலத்தில் காட்சியளித்தார். இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து ஆகஸ்ட் 17ம் தேதி சிறப்பு பூஜைகள்செய்யப்பட்டு மீண்டும் அத்தி வரதர் குளத்திற்குள் வைக்கப்பட்டார். 

இந்த நிலையில், அத்திவரதர் விழாவிற்காக கோவிலின் உள்ளே 18 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த 18 உண்டியல்களில் 13 உண்டியல்களில் எண்ணப்பட்ட காணிக்கைகளின் மதிப்பு ரூ.9.90 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 உண்டியல்கள் எண்ணப்படவுள்ளன. இது தவிர 164 கிராம் தங்கம், சுமார் 5000 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP