Logo

கூடங்குளம் அணுக்கழிவுகள் தரமாக தரைக்கடியில் சேமிப்பு: மத்திய அமைச்சர் விளக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கழிவுகள் தரமாக தரைக்கடியில் சேமிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கமளித்துள்ளார்.
 | 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத் தொடரில், கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே சேமிக்கப்படுகிறது என திமுக எம்.பி. ஞானதிரவியம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர்  ஜிதேந்திர சிங், கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அணுக்கழிவுகளை அணுஉலையில் இருந்து பாதுகாப்பான தூரத்தில், தரைக்கடியில் 15 மீ. ஆழத்தில் தரமான முறையில் சேமிக்கப்படுவதாக கூறினார். மேலும், அணுக்கழிவுகள் சேமிக்கப்படும் இடம் குறித்த விவரத்தை பாதுகாப்பு காரணங்களால் தெரிவிக்க இயலாது என்றும், சேமிக்கப்பட்டுள்ள கழிவுகள் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் மீண்டும் உபயோகிக்கப்படும் எனவும் தெரிவித்தார். வேறு அணுமின் நிலையத்தின் கழிவுகள் கூடங்குளத்தில் சேகரித்து வைக்கப்படுவதில்லை எனவும் அமைச்சர் விளக்கமளித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP