நள்ளிரவு பார்ட்டியில் திரைப்பட பிரமுகர் கலாட்டா! துப்பாக்கி முனையில் அடாவடித்தனம்!

பிரபல நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் குடித்து விட்டு பிரபல திரைப்பட விநியோகஸ்தர் நெசப்பாக்கம் பிரவீன் துப்பாக்கி முனையில் தொழிலதிபரை மிரட்டி அடாவடித்தனம் செய்துள்ளார்.
 | 

நள்ளிரவு பார்ட்டியில் திரைப்பட பிரமுகர் கலாட்டா! துப்பாக்கி முனையில் அடாவடித்தனம்!

பிரபல நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவில் குடித்து விட்டு பிரபல திரைப்பட விநியோகஸ்தர் நெசப்பாக்கம் பிரவீன் துப்பாக்கி முனையில் தொழிலதிபரை மிரட்டி அடாவடித்தனம் செய்துள்ளார்.
சென்னை தி.நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஹேமநாத். இவர் அண்ணா மேம்பாலாம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு மது அருந்துவதற்காக  தனது நணபர்களுடன் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரில், 5 பேர் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தனர்.


இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில்  ஹேமநாத்திற்கு எதிரே அமர்ந்திருந்த  திரைப்பட விநியோகஸ்தரான நெசப்பாகம் பிரவீனும், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 5 பேரும், ஹேமநாத்திடம் சென்று, தாங்கள் குடித்ததற்கு பணம் செலுத்தி விடும் படி ஹேமநாத்தை மிரட்டியுள்ளனர். இதில் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர், பிரவீனும், அவரது நண்பர்களும், தொழிலதிபர் ஹேமநாத்தை கார் ஷெட்டுக்கு இழுத்து சென்று துப்பாக்கிகளை எடுத்து நெத்தியில் வைத்து மிரட்டியுள்ளனர். 
இதனால் பதற்றமடைந்து, அங்கிருந்து தப்பியோடிய ஹேமநாத், நடந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். இது குறித்து சம்பவம் நடந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சினிமா விநியோகஸ்தர்கள் இருவர் மீதும் ஐபிஎசி 147, 148, 341, 294 (பி), 385, 506/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, கார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP