சிறப்பான சம்பவம்! என்கவுண்டருக்கு வைரலாகும் வீடியோ!

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையிலிருந்த நான்கு பேர் திட்டமிட்டு கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, கொன்றதுடன், பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
 | 

சிறப்பான சம்பவம்! என்கவுண்டருக்கு வைரலாகும் வீடியோ!

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான  பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையிலிருந்த நான்கு பேர் திட்டமிட்டு கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, கொன்றதுடன், பெட்ரோல் ஊற்றி எரித்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பிரியங்கா ரெட்டியை எரித்த அதே இடத்தில், சம்பவம் நடந்தது எப்படி என்று நடித்துக் காட்டுவதற்காக போலீசார், நால்வரையும் அழைத்துச் சென்ற போது, அவர்கள் தப்பிக்க முயன்றதாக கூறி நான்கு பேரையும் என்கவுண்டர் செய்து போலீசார் சுட்டுக் கொன்றனர். 

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் என்கவுன்டர் நடைபெற்ற சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் மீது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மலர்களை தூவி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபலங்களும், பொதுமக்களும் ஹைதராபாத் போலீசாருக்கும், தெலுங்கானா அரசுக்கும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP