இறப்பில் கூட ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: பிரேமலதா

இறப்பில் கூட ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
 | 

இறப்பில் கூட ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: பிரேமலதா

இறப்பில் கூட ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் கல்லறையில் பிரேமலதா விஜயகாந்த் மலரஞ்சலி செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இறப்பில் கூட அரசியல் செய்வது திமுகவும் ஸ்டாலினும் மட்டுமே. குழந்தை மீட்பு நேரத்தில் கடவுளை பற்றியும் மரணத்தை பற்றியும் குறை சொல்வது தவறான விஷயமாகும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசாங்கம், பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பிரேமலதா அவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவும் வழங்கினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP