Logo

பட்டம் கொடுக்கலையா...! ஆவேசத்தில் வைரமுத்து!

பட்டம் கொடுக்கலையா...! ஆவேசத்தில் வைரமுத்து!
 | 

பட்டம் கொடுக்கலையா...! ஆவேசத்தில் வைரமுத்து!

‘காப்பிய கவிஞர்’, ‘கவி சாம்ராட்’, ‘கவிப்பேரரசு’ என பட்டங்கள். சாகித்ய அகாடமி விருது,7 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன், மூன்று கெளரவ டாக்டர் பட்டங்கள் என்று பெயருக்கு முன்னால் பட்டங்கள் நீண்டிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு இது போதாத காலம் போல!

பட்டம் கொடுக்கலையா...! ஆவேசத்தில் வைரமுத்து!

இவரைப் பாராட்டி எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகம்  கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்திருந்தது. இது குறித்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பாரி வேந்தர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே வைரமுத்துவிற்கும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். 

சமீபத்தில் இது குறித்த அழைப்பிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த பாடகி சின்மயி, 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டமா?’ என்று கடுமையாக வைரமுத்துவை சாடியிருந்தார். 

பட்டம் கொடுக்கலையா...! ஆவேசத்தில் வைரமுத்து!

சமூக வலைத்தளங்களில் இது பெரும் விவாதமாக மாறி, வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு எதிர்ப்புகளும் எழுந்தன. இந்நிலையில், பா.ஜ.க.வின்  ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் இன்னொரு பக்கம், வைரமுத்து ஆண்டாள் பற்றி பேசியிருந்த குறிப்புகளை அமைச்சருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். போதாதற்கு ஹெச்.ராஜா உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சரிடம், ‘ஏற்கெனவே பாஜகவிற்கு செல்வாக்கு இல்லை. தவிர, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வைரமுத்து திமுக பக்கம் தான் நிற்கிறார். திகார் ஜெயிலில் சென்று பா.சிதம்பரத்தைச் சந்தித்தார் என்று சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியானது.

பட்டம் கொடுக்கலையா...! ஆவேசத்தில் வைரமுத்து!

அதன் பிற்கு, வைரமுத்துவுக்கு பட்டம் வழங்க ராஜ்நாத் சிங் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியானது.  இந்நிலையில், “ஒரு மேடையில் டாக்டர் பட்டம் வழங்கப்போவதாக அறிவித்திருந்தார்கள் .நான்கு நாட்களுக்கு முன்னர் 28 ஆம் தேதியை பிளாக் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள், என்று சொன்னார்கள். மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு கடுமையான  எதிர் நிலை எடுத்துள்ள கவிஞருக்கு எவ்வித இழப்பும் இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்கிற ரீதியில் கவிப்பேரரசுவின் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவருகின்றன. 

பட்டம் கொடுக்கலையா...! ஆவேசத்தில் வைரமுத்து!

மேலும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையிலேயே தங்கப் பதக்கங்களை மாணவ, மாணவிகள், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வாங்க மறுத்து வருகிறார்கள். வாங்கிய தேசிய விருதுகளை எழுத்தாளர்கள் மறுத்து வருகிறார்கள். அதே போல் வைரமுத்துவும் விருதுகளை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திருப்பிக் கொடுப்பாரா என்றும் சமூக வலைத்தளங்களில் வைரமுத்துவிடம் கேள்வி கேட்டு தமிழர்கள் தொடர்ந்து பின்னூட்டங்களை அளித்து வருகிறார்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP