அ.தி.மு.க அரசை கண்டித்து தி.மு.க இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்!

அ.தி.மு.க அரசை கண்டித்து தி.மு.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
 | 

அ.தி.மு.க அரசை கண்டித்து தி.மு.க இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்!

அ.தி.மு.க அரசை கண்டித்து தி.மு.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. 

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி தான் அறிஞர் அண்ணா டீ திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தார். அதற்கு மறுநாளான செப்டம்பர் 18ம் தேதி கட்சியின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதனை நினைவு கூறும் வகையிலும், தற்போதுள்ள அ.தி.மு.க ஊழல் அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.அதன்படி, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள்  தலைமையில் இன்று தி.மு.க ஆர்ப்பாட்டம்  நடத்துகிறது. சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP