உஷார்!! வீட்டிற்குள்ளே வேவு பார்க்கும் எல்இடி டிவி! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

செல்போன், ஸ்மார்ட் போன்களை போலவே, எல்.சி.டி., எல்.இ.டி. டி.வி.யும் சகல ஆன்-லைன் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் டிவிக்களாக உருமாறி தொழில் நுட்பத்தில் வளர்ந்து வருகிறது.
 | 

சமீபத்தில், அமெரிக்காவின் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை நாட்களான பிளாக் ப்ரைடே மற்றும் சைபர் மன்டேவில் இந்த வருடமும் ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனை களைகட்டி முடிந்துள்ள நிலையில், தற்போது எப்.பி.ஐ. அமைப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உஷார்!! வீட்டிற்குள்ளே வேவு பார்க்கும் எல்இடி டிவி! அதிர்ச்சியில் பொதுமக்கள்! 

அதில் தற்போது உற்பத்தியாகும் பெரும்பாலான டி.வி.க்களில் இணைய இணைப்பு தொடங்கி பேசியல் ரெகெக்னிஷன் வரை பல திறன்களை கொண்டுள்ளன. இதனால் இணைய வழி ஹேக்கர்களின் ஊடுருவல் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டி.வி.க்களை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் ஆப்பின் வடிவமைப்பாளர்கள் டி.வி. வழியாக நம்மை எந்த அளவு கண்காணிக்க வாய்ப்புள்ளதோ அதே அளவு இணைய வழி ஹேக்கர்களுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இணைய தள இணைப்புக்காக இயக்கப்படும் அதிநவீன மென்பொருள் மற்றும் அதில் உள்ள மைக் ஹேக்கர்கள் நம்மை உளவு பார்க்க ஏதுவாக இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உஷார்!! வீட்டிற்குள்ளே வேவு பார்க்கும் எல்இடி டிவி! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தொலைக்காட்சியின் கேமராக்கள் மற்றும் மைக் வாயிலாக நம் வீட்டுப் படுக்கையறை வரை ஹேக்கிங் செய்ய முடியும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பித்துகொள்ள, நம் ஸ்மார்ட் டி.வி. பற்றி அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்திருப்பதும், புதிதாக வாங்கிய டி.வி.க்களில் உள்ள நெட்வொர்க் கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றுவதும் மிக முக்கியமானது என பரிந்துரைக்கிறது எப்.பி.ஐ.

மேலும், கேமரா மற்றும் மைக்குகளை ஆன், ஆப் செய்ய வேண்டும் என்றும், முடியாவிட்டால் கேமரா மீது ஒரு கருப்பு டேப்பை ஒட்டிவிடுவது நல்லது. தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்யும் அப்டேட்டுகளை உடனுக்குடன் செய்துவிடுவது நல்லது. தேவையில்லாத நேரங்களில் இணையத்தில் இருந்து உங்கள் டி.வி.யை துண்டித்து விட வேண்டும்.  நீங்க டி.வி. பார்க்கலைனாலும் டி.வி. உங்களை பார்க்கும் என்பதை இனியாவது மனதில் நிறுத்தி கொண்டு கவனமாக இருப்பதே ஹேக்கர்களிடம் இருந்து நாம் தப்பிக் கொள்வதற்கான எளிய வழிமுறை. இப்படி எல்லோர் வீட்டிலும் படுக்கையறை, வரவேற்பறை என்று மெகா சைஸில் எல்.இ.டி டி.விக்களை மாட்டி வைத்திருக்கிறோம். அதனால இனியாவது உஷாரா இருந்துக்கோங்க... காலம் ரொம்பவே கெட்டு கிடக்கு!

2Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP