Logo

எச்.ஐ.வி ரத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு கர்ப்பிணி பெண்! அதிர்ச்சி தகவல்

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தற்போது சென்னையிலும் பெண் ஒருவருக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
 | 

எச்.ஐ.வி ரத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு கர்ப்பிணி பெண்! அதிர்ச்சி தகவல்

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தற்போது சென்னையிலும் பெண் ஒருவருக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இரத்தச் சிவப்பணு குறைபாடு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒருவரது ரத்தம், அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்டுள்ளது பின்னர் தான் தெரிய வந்தது. இந்த விவகாரம் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சர்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணிற்கு தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் சென்னையில் உள்ள ஒரு பெண்ணிற்கும் நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. ஒரு சில மாதங்களுக்கு பின்னர் அதாவது கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையில் தான் அவருக்கு எச்.ஐ.வி இருந்தது தெரிய வந்தது. 

இதுதொடர்பாக சம்மந்தப்பட்டவர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கருணை மனு கொடுத்தும் எந்த பதிலும் வரவில்லை எனவும் அந்த பெண் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். 

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர், மாங்காடு அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிடம் புகார் அளித்துள்ளார். இதற்கான ஆதாரங்களையும் அவர் வைத்துள்ளதாக கூறியுள்ளார். 

தற்போது இந்த பெண்ணிற்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று எதுவும் ஏற்படவில்லை. ஆனால் தொடர்ந்து ரத்த பரிசோதனை செய்ய வேண்டும், குழந்தைக்கு ஒன்றரை வயதிற்கு அப்புறமாகவே  எச்.ஐ.வி இருக்கா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று டாக்டர்கள் கூறியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். 

அந்த பெண் மட்டும் எச்.ஐ.விக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அந்த பெண் கூறுகையில், "எச்.ஐ.வி இருந்தது தெரிய வந்தததையடுத்து நான் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு என் குடும்பத்தினருடன் சென்று கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், ரத்தம் ஏற்றும் போது ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அலட்சியமாக பதில் கூறினர். மேலும், எங்கள் மீது வழக்கு தொடர்ந்தாலும் அது செல்லாது என டாக்டர்கள் கூறினர். 

எனது குடும்ப சூழ்நிலையால் தான் நான் இதுவரை இதனை வெளியில் தெரிவிக்கவில்லை. ஆனால், எனது குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படா வண்ணம் அரசு சிகிச்சை அளிக்க வேண்டும். எனது குழந்தையின் எதிர்காலத்திற்கு அரசு எதாவது செய்ய வேண்டும்" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP