திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் 

திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி செய்தபோது  இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியது என ராஜபக்சே அண்மையில் பேட்டியளித்திருப்பதாகவும், இதனால் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த திமுக- காங்கிரஸ் கட்சியில் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP