அடேங்கப்பா !! தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளமாம்

"வேக்பிட் இனொவேஷன்ஸ்" நிறுவனம், தூக்கத்தை பற்றிய தங்களது ஆராய்ச்சிக்காக, தினமும், ஒன்பது மணி நேரம் வீதம் 100 நாட்களுக்கு துாங்க தயாராக இருப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது.
 | 

அடேங்கப்பா !! தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளமாம்

கர்நாடகா மாநில பெங்களூரை சேர்ந்த, "வேக்பிட் இனொவேஷன்ஸ்" நிறுவனம், தூக்கத்தை பற்றிய தங்களது ஆராய்ச்சிக்காக, தினமும், ஒன்பது மணி நேரம் வீதம் 100 நாட்களுக்கு துாங்க தயாராக இருப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவன இயக்குனர் சைதன்யா ராமலிங்க கௌடா கூறுகையில், வாழ்க்கை மற்றும் வேலை, இரண்டையும் நிர்வகிப்பதன் மூலம், நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளதாகவும், இதற்காக, தூக்கத்தின் மீது பிரியம் கொண்டவர்கள் நிறைய பேர் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த வேலைக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அந்நிறுவனம் வழங்கும் படுக்கையில் தான் படுக்க வேண்டும் என்றும், அவர்களது தினசரி வேலைகளில் எந்த தடையும் இல்லை எனவும், உறங்கும்போது மட்டும் அவர்கள் வழங்கியுள்ள படுக்கையில் உறங்கினால் போதும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் கணக்குப்படி, குறைந்தபட்சம், ஒன்பது மணி நேரமாவது தேர்வு செய்யப்படுபவர்கள் உறங்க வேண்டும், இரவு படுக்க போகும் போது 'பைஜாமா' உடையை மட்டுமே அணிய வேண்டும். இப்படியாக 100 நாட்களுக்கு உறங்க வேண்டும். மடிக்கணினி மட்டும் உபயோகிக்கக் கூடாது. இதுவே அந்நிறுவனத்தினரின் நிபந்தனை.

தூங்குவதற்காக தேர்வு செய்யப்படுபவர்கள் ஒவ்வொருவரின் உடலிலும், அவர்களது தூக்கத்தை கண்காணிப்பதற்கான கருவி பொருத்தி, அதன் மூலம் அவர்கள் உறங்கும் விதங்கள் குறித்தும், குறிப்பிட்ட படுக்கையில் படுத்து உறங்குவதற்கு முன்னும், பின்னும் உள்ள மாற்றங்கள் குறித்தும், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகின்றது.

இதை 100 நாட்கள் வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்க அந்நிறுவனம் தயாராக இருப்பதாகவும் 100 நாட்களுக்கு, ஒரு நாளில் ஒன்பது மணி நேரம் தூங்க தயாராக இருப்பவர்களை தேடிக் கொண்டிருக்கிறது இந்நிறுவனம். இந்த வேலையை நீங்க தூங்கிக் கொண்டே செய்யலாம் என்பது கூடுதல் தகவல்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP