முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்.. மத்திய அரசு

முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 | 

முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்.. மத்திய அரசு

முதியோர் ஓய்வூதிய திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் பலனடைய தகுதி உடையவர்கள் ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதாருக்கு இன்னும் பதிவு செய்யாதவர்கள், இந்த திட்டத்தில் சேருவதற்கு முன்பு ஆதார் சேர்க்கைக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவற்ற 'பயோ மெட்ரிக்' விவரங்களால் ஆதார் அடையாளத்தை உறுதி செய்ய முடியாவிட்டால், அத்தகைய நபர்களுக்கு ஆதார் எண் கிடைக்க மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச்சேவைகள் பிரிவு உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2017-18, 2018-19 மத்திய பட்ஜெட்களில் ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு 8 கிக உத்தரவாத தொகை வழங்கும் இந்த திட்டம், எல்ஐசி மூலம் செயல்படுத்தப்படுகிறது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP