டிசம்பர் 26ஆம் தேதி வானில் நிகழப்போகும் ஓர் அதிசயம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 26ஆம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது.
 | 

டிசம்பர் 26ஆம் தேதி வானில் நிகழப்போகும் ஓர் அதிசயம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 26ஆம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் குறித்து கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘ 30 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 26ஆம் தேதி காலை 8.36 மணிக்கு தொடங்கும் கிரகணம் 10.30 மணிக்கு முழுமை பெற்று 11.33 மணிக்கு விலகும். சூரிய கிரகணத்தால் தென் தமிழகத்தில் உள்நிழலும், வடதமிழகத்தில் வெளிநிழலும் படியும். வெற்றுக்கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம்;சூரியக்கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், ‘கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் சூரியக்கண்ணாடிகளை பெற்றுக்கொள்ளலாம். 94429 39946, 94876 73036 என்ற எண்களுக்கு அழைத்தால் தபால் சேவை மூலம் சூரியக்கண்ணாடிகள் அனுப்பி வைக்கப்படும்’ என்று கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP