5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் கனமழை காரணமாக 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் கனமழை காரணமாக 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அதே நேரத்தில், அண்ணாபல்கலைக்கழக தேர்வுகள் வழக்கம் போல் இன்று நடைபெறும் என்றும், செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் கல்லூரிகள் செயல்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP