Logo

மெரினாவில் கரை ஒதுங்கிய 3 சடலங்கள்... மக்கள் அதிர்ச்சி !

சென்னை மெரினா கடலில் 8 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது. இந்த சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலங்கள் கைப்பற்றபட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 | 

மெரினாவில் கரை ஒதுங்கிய 3 சடலங்கள்... மக்கள் அதிர்ச்சி !

சென்னை மெரினா கடலில்  8 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது. இந்த சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரை மணலில் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்த மோட்டார் பைக் வாகனம் பல நாட்களாக ரோந்துக்கு வராததே காரணம் என அங்குள்ள வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் காலை 7:30 மணிக்கு அடையாளம் தெரியாத சுமார் 27 வயது மதிக்கதக்க ஆண சடலம் கரை ஒதுங்கியது.  அடுத்து காலை 11:15  மணிக்கு எம்.ஜி.ஆர் நினைவிடம் பின்புறம் JNN கல்லூரியில் பயின்று வந்த கண்ணன் என்பவரது சடலம் கரை ஒதுங்கியது. இதனையடுத்து மதியம் 2:30 க்கு நண்பர் ஜெயகுமாருடன் குளித்து கொண்டிருந்த ஜெயசந்திரன் அலையில்  சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு, பிறகு  சடலமாக கரை ஒதுங்கியுள்ளது. 

மூன்று சடலங்களும் கைப்பற்றபட்டு காவல்துறையினரால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.   8 மணி நேர இடைவெளிக்குள் மெரினா கடலில் அடுத்தடுத்து மூன்று உடல்கள் கரை ஒதுங்கிய சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மெரினாவில் கரை ஒதுங்கிய 3 சடலங்கள்... மக்கள் அதிர்ச்சி !

கடற்கரை ஒட்டிய மணல் பரப்பில் ரோந்து வரும் காவல்துறைமோட்டார் வாகனம் கடந்த சில நாட்களாக வருவதில்லை என கடற்கரையில் உள்ள வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து ரோந்து பணியின்போது எச்சரிக்கை விடுப்பது வழக்கம், பொதுமக்களை கடலுக்குள் குளிக்க செல்லகூடாது என எச்சரிக்கை வைக்கபட்டிருப்பதையும் மீறி கடலுக்குள் செல்வதே உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP