நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 10 மீனவர்கள்!

நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 10 மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 10 மீனவர்கள்!

நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 10 மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து முட்டத்தைச்சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, விசைப்படகு பழுதானதால், மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர். சுமார் 14 நாட்டிகல் மைல் தொலைவில் மீனவர்கள் சிக்கி தவிப்பதால் மீனவர்களை மீட்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP