மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை..

மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை..
 | 

மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜமால்கான் குட்டகாரத்தெருவில் பழனிவேல் - கலைவாணி  தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் காதல் திருமணம் செய்தனர். திருமணமாகி 5 மாதங்கள் ஆன பிறகு, பாபு வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்துக்கு அடிமையானார். இதற்கிடையே கலைவாணி கர்ப்பமடைந்ததால் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் மறுபடியும் அவர் பாபு வீட்டுக்கு வரவில்லை. இதனால் பாபு, கலைவாணி வீட்டுக்கு சென்று அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். இருப்பினும் அவர் வர மறுத்துவிட்டார். இதையடுத்து பாபு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் கலைவாணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 11 மாதங்கள் ஆன பிறகு பாபு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார்.

மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை..

பின்னர் ஊர் முக்கியஸ்தர்களுடன் கலைவாணி வீட்டுக்கு சென்று, அவரை சமாதானம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இருப்பினும் கலைவாணி பாபுவுடன் குடும்பம் நடத்தாமல் தனது தாய் வீட்டுக்கும், அவரது அக்காள் வீட்டுக்கும் அடிக்கடி சென்று வந்தார்.
இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கடந்த 5.12.2016 அன்று கலைவாணியை கழுத்தை நெரித்து பாபு கொலை செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி (பொறுப்பு) மகாலட்சுமி தீர்ப்பு வழங்கினார். அதில், இவ்வழக்கில் பாபு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP