யார்கிட்ட..? செயின் பறிக்க முயன்ற நபரை துரத்தி அடித்த பெண்..

யார்கிட்ட..? செயின் பறிக்க முயன்ற நபரை துரத்தி அடித்த பெண்..
 | 

யார்கிட்ட..? செயின் பறிக்க முயன்ற நபரை துரத்தி அடித்த பெண்..

மதுரையில் செயின் பறிக்க முயன்ற இளைஞரிடம் இருந்து பெண் ஒருவர் தப்பிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மதுரை, பாஸ்டின் நகர் பகுதியைச் சேர்ந்த ஜாக்லின் என்பவர் சில நாட்களுக்கு முன்பு தனது பேத்தியுடன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அவர்களை பைக்கில் இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார். ஆள் நடமாட்டம் இல்லாதபோது, ஜாக்லினின் கழுத்தில் இருந்து 10 பவுன் மதிப்பிலான தங்க செயினை பைக்கில் வந்தவர் பறிக்க முயன்றுள்ளார்.

யார்கிட்ட..? செயின் பறிக்க முயன்ற நபரை துரத்தி அடித்த பெண்..

உடனே சுதாரித்துக்கொண்ட ஜாக்லின், அந்த இளைஞரின் கையை தட்டிவிட்டு கூச்சலிட்டுள்ளார். உடனே அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தியதில் செயின் பறிக்க முயன்ற நபர், அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP