மருதமலை அருகே காட்டுத் தீ!

மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால், மரங்கள் மற்றும் செடிகள் தீயில் கருகி சேதமாகின. வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

மருதமலை அருகே காட்டுத் தீ!

மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால், மரங்கள்  மற்றும் செடிகள் தீயில் கருகி நாசமாகின.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரமான மருதமலைக்கு அருகே நேற்று மதியம் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ படிப்படியாக, அருகே உள்ள வனப்பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

இதைத்தொடர்ந்து, தடாகம் வனப்பகுதிக்கும் காட்டுத் தீ பரவியது. கடந்த வாரத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான இரு காட்டுத் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் , மருதமலை அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது, கோவை வனப்பகுதியில் அடுத்தடுத்து நான்காவது முறை ஏற்படும் தீவிபத்தாகும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP