Logo

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை: செல்ஃபி எடுக்கும் மோகத்தில் இளைஞர்கள்!

மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள கல்லார் பகுதியில் தண்ணீர் தேடி ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவதால், குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 | 

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை: செல்ஃபி எடு

மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள கல்லார் பகுதியில் தண்ணீர் தேடி ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவதால், குடியிருப்பு பகுதிகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் என்னுமிடத்தில் ஒற்றை ஆண் காட்டு யானையொன்று, அங்குள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிகிறது. இதனால், இப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நீண்ட தந்தங்களுடன் கூடிய இந்த ஆண் யானை சாலையோரம் நடந்து செல்கையில், இளைஞர்கள் சிலர் தங்களது செல்ஃபோன் மூலம் புகைப்படம் எடுக்க முண்டியடித்து கொண்டு செல்வதால் அங்கு ஆபத்தான சூழல் நிலவி வருகிறது.

இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், "தற்போது, மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட காடுகளில் வறட்சி நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தால் இயற்கையான நீராதாரங்கள் வற்றிவிட்டன. எனவே, யானை போன்ற உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறி தண்ணீர் தேடி வருகின்றன.

எனவே, யானைகளை கண்டால் அமைதியாக வழிவிட்டால் அவை சென்றுவிடும். ஆனால், அவற்றை தொந்தரவு செய்வதோ, புகைப்படம் எடுக்க முயற்சித்தாலோ ஆபத்து ஏற்படும். கடந்த சில நாட்களாக இதே பகுதியில் சுற்றித்திரியும் இந்த ஒற்றை யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதுவரை இப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து வனத்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும்," என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP