Logo

யார் பெரிய ஆள்? என்ற போட்டி: 'பாடி பில்டர்' சரமாரியாக வெட்டிக் கொலை!

திருச்சியில் யார் பெரிய ஆள் என்ற போட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஜிம் 'பாடி பில்டர்' மணி என்பவர் கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
 | 

யார் பெரிய ஆள்? என்ற போட்டி: 'பாடி பில்டர்' சரமாரியாக வெட்டிக் கொலை!

திருச்சியில்  யார் பெரிய ஆள் என்ற போட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஜிம் 'பாடி பில்டர்' மணி என்பவர் கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

திருச்சி உறையூர் மின்னப்பன் 3வது தெருவை சேர்ந்தவர் சட மணி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய தூரத்து உறவினர்களான செந்தில், புகழேந்தி ஆகியோருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக யார் பெரிய ஆள் என்ற போட்டி இருந்துள்ளது. இதனால் அடிக்கடி பிரச்சனை செய்து வந்துள்ளனர். இதனால் இரு தரப்பினர் மீதும் உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சட மணிக்கு ஆதரவாக ஒவ்வொரு முறையும் ஜிம் மணி என்பவர் தான் எதிர் தரப்பினரிடம் சண்டைக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் ஜிம் மணிக்கும், செந்திலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த இதில், ஜிம் மணி செந்திலை கீழே தள்ளி விட்டத்தில் செந்தில் கீழே விழுந்து தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த செந்தில் உறவினர் புகழேந்தியும், செந்திலும் சேர்ந்து ஜிம் மணியை அரிவாளால் வாய் மற்றும் உடல் பகுதியில் சாராமரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜிம் மணி சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உறையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

யார் பெரிய ஆள்? என்ற போட்டி: 'பாடி பில்டர்' சரமாரியாக வெட்டிக் கொலை!

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல துறை அமைச்சர் வளர்மதியின் வீட்டின் அருகே தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் வீட்டில் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் எப்பொழுதும் இருப்பர். அவர்கள் இருக்கும் போதே நடந்த இந்த சம்பவத்தை காவல் துறையினர் ஏன் தடுக்கவில்லை என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரு தரப்பினருக்கும் இடையே 4 வருடங்களாக யார் பெரிய ஆள் என்ற போட்டியில் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. கடந்த 6 மாதமாக இந்த பிரச்சனை அதிகமாக இருந்து வந்துள்ளதாகவும், ஜிம் மணி கடந்த 4 மாதமாக மது அருந்தாமல் இருந்துள்ளார். இரண்டு நாட்களாக மது அருந்தி உள்ளார், நேற்று மதுபோதையில் இருந்த ஜிம் மணி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

யார் பெரிய ஆள்? என்ற போட்டி: 'பாடி பில்டர்' சரமாரியாக வெட்டிக் கொலை!

மேலும் இந்த பிரச்சனையில் ஈடுபட்ட அனைவருமே மது போதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனையில் இருந்த ஜிம் மணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் உறையூர் பகுதியில் உள்ள மின்னப்பன் தெரு முழுவதுமே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த செந்திலை கைது செய்து சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமணையில் அனுமதிகபட்டுள்ளார்.
தப்பியோடிய புகழேந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP