Logo

2 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய வலசக்கல்பட்டி ஏரி: பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை

கெங்கவல்லி அருகே பச்சமலைபகுதிகளில் பெய்த தொடர் மழையின்காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்பு வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 | 

2 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய வலசக்கல்பட்டி ஏரி: பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட கோரிக்கை

கெங்கவல்லி அருகே பச்சமலைபகுதிகளில் பெய்த தொடர் மழையின்காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்பு வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே  கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள வலசக்கல்பட்டி ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி 74 கிருஷ்ணாபுரம், கெங்கவல்லி, வலசக்கல்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு, ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு  நீர் பாசன வசதியாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சேலம் மாவட்டம் கெங்கவல்லி  மற்றும் பச்சமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்து வந்த கனமழையால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வலசக்கல் பட்டி ஏரி நிரம்பியுள்ளது. அதோடு உபரி நீர் சுவேத நதியில் கலந்து வீணாகிறது, இதனால் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெரும் வகையில்  ஏரியின் கிழக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட பொதுப்பணித் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பச்ச மலைப்பகுதில் கனமழை பெய்யும் போதெல்லாம்  வலசக்கல் பட்டி ஏரி நிரம்பி விடுகிறது, இதனால் ஏரியின் கிழக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டால் 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு நீலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் பற்றாக்குறை தீர்ந்து விடும் என்பதால் பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இந்த முறையாவது தண்ணீர் திறந்துவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP