வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி விமான நிலையம்..!

சுதந்திரதினத்தையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள திருச்சி விமானநிலையம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
 | 

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் திருச்சி விமான நிலையம்..!

சுதந்திரதினத்தையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள  திருச்சி விமானநிலையம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் அதேவேளையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில்,  திருச்சி விமானநிலையத்தில் கடந்த 8ம் தேதிமுதல் பார்வையாளர் மாடம் மூடப்பட்டதுடன், விமானநிலைய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம் மற்றும் போலீசாரைக்கொண்டு 5அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானபயணிகள் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே  மூவர்ண கொடியினை பிரதிபலிக்கும் வகையில் மூவர்ண விளக்குகளைக்கொண்டு விமான நிலைய முனையம் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இதர இடங்களில் பல்வேறு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விமான நிலையம் முழுவதும் பிரகாசமாக ஜொலிக்கிறது. இது பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவரும் வகையில் உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP