சுர்ஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கினார் ஸ்டாலின்!

சுர்ஜித்தின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிதி வழங்கினார்.
 | 

சுர்ஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கினார் ஸ்டாலின்!

சுர்ஜித்தின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிதி வழங்கினார். 

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைகிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் குடும்பத்தை நேரில் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சுஜித்தின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையே என்ற ஆதங்கம் உள்ளதாகவும், அரசியல் சாயம் பூசப்படும் என்பதால் தான் குழந்தை சுர்ஜித் மீட்பு பணியை நேரில் பார்வையிடவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், சுர்ஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், குழந்தையை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை? என்றும், ஆழ்துளை கிணற்றில் 26 அடியில் இருந்தபோதே குழந்தை சுர்ஜித்தை மீட்டிருக்கலாம் எனவும் கூறினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP