ரூ.2000 நோட்டுக்கு தடை... நூதனமாக ரூ.78 லட்சம் கொள்ளையடித்தவருக்கு போலீஸ் வலைவீச்சு

பெரம்பலூரில் ரூ.2000 நோட்டை தடை செய்ய உள்ளதாக கூறி 3 பேரை ஏமாற்றி ரூ.78 லட்சம் கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
 | 

பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வந்த சுரேஷ் என்பவர், விரைவில் ரூ.2000 நோட்டை மத்திய அரசு தடை செய்யவுள்ளதாகவும், எனவே ரூ.2000 நோட்டுகளை ரூ.500 நோட்டுகளாக மாற்றி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி மதுரையை சேர்ந்த சவுந்தரராஜன், கார்த்தி, மும்மூர்த்தி ஆகியோர் ரூ.78 லட்சத்தை அவரிடம் வழங்கியுள்ளனர். ரூ.500 நோட்டுகளாக மாற்றி வருவதாக எடுத்து சென்றவர் அவர் சொன்னபடி திரும்பி வரவில்லை. இதையடுத்து அவர் வசித்து வந்த இடத்தில் சென்று விசாரித்த போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP