நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டிக் கொலை!

சிவகங்கை நீதிமன்றம் அருகே ரவுடி ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டிக் கொலை!

சிவகங்கை நீதிமன்றம் அருகே ரவுடி ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று வழக்கு ஒன்றில் ஆஜராக சிவகங்கை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நீதிமன்றம் அருகே அவரை ஓட ஓட வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். 

இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்திரக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP