சேலத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!

சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்திட போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தல்...
 | 

சேலத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!

சேலம் அருகே உணவு பொருள் பூங்கா அமைத்திட விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கஞ்சமலை அடிவார பகுதியான பெரிய சீராகபாடி, கல்பாரப்பட்டி ஊராட்சிகளில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி அங்கு உணவு பொருள் பூங்கா அமைக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க நிலம் அளக்கப்படுவதாக கூறிய அதிகாரிகள் தற்போது உணவு பொருள் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக கூறி, அங்குள்ள நிலத்தை காவல்துறையினரின் துணையோடு அளவீடு செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களை அப்புறப்படுத்தி உணவுப் பூங்கா அமைக்கும் பணியை மாற்று இடங்களில் குடியிருப்பு இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

மேலும், சேலம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுபடுத்திட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது போன்ற உயிரிழப்புகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது குறித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கூறும் போது, பெரியசீரகாபாடி பகுதியில் வசித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினரை வலுகட்டாயமாக வெளியேற்றி அந்த இடத்தில் உணவு பொருள் பூங்கா அமைத்திடும் நடவடிக்கையை கைவிட்டு அதற்கு அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஓமலூர், பனமரத்துபட்டி ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் மிக வேகமாக பரவி வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் திமுக தலைவரின் அனுமதி பெற்று மக்களை ஓன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சேலம் நாடாளுமன்ற உறுப்பினருடன், வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலாசேகர், உள்ளிட திமுகவினர் பங்கேற்றனர்,

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP