நாளை சொர்க்க வாசல் திறப்பு! களைகட்டும் ஸ்ரீரங்கம்!

நாளை சொர்க்க வாசல் திறப்பு! களைகட்டும் ஸ்ரீரங்கம்!
 | 

சொர்க்க வாசல் திறப்பு! களைகட்டும் ஸ்ரீரங்கம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான இன்று (5ம்தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். நாளை (6ம் தேதி) அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. 

சொர்க்க வாசல் திறப்பு! களைகட்டும் ஸ்ரீரங்கம்!

108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா புகழ்பெற்றது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன்பின் பகல்பத்து உற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாளாகிய நிறைவு இன்று (5ம் தேதி) நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

சொர்க்க வாசல் திறப்பு! களைகட்டும் ஸ்ரீரங்கம்!

பக்தர்கள் மோட்சம் அடைய விரும்பினால் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்ற ஆசைகளை துறக்க வேண்டும். ஆசைகளில் கொடூரமான ஆசை பெண்ணாசை. எனவே, பெண்ணாசையை துறந்தவர்கள் தான் மோட்சத்தை அடையலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் நம்பெருமாள் இன்று (5ம் தேதி) மோகினி அலங்காரத்தில் அழகிய பெண் வேடத்தில் எழுந்தருளி பக்தர்கள் முன்பு காட்சியளிக்கிறார்.

சொர்க்க வாசல் திறப்பு! களைகட்டும் ஸ்ரீரங்கம்!

நாளை (6ம் தேதி) அதிகாலை பரமபரவாசல் திறப்பு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், சுந்தர் பட்டர், நந்து பட்டர்கோயில் அலுவலர்கள்,பணியாளர்கள் செய்து உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP